var slideShowInterval = 4000; Official website of Arulmigu Angalamman Temple,Melmalayanur - Administration
skip to main content

Arulmigu Angalamman Temple - Unjal Festival Photos

Unjal Urchavam on 2017
oonjal17 (1)
oonjal17 (10)
oonjal17 (11)
oonjal17 (12)
oonjal17 (13)
oonjal17 (2)
oonjal17 (3)
oonjal17 (4)
oonjal17 (5)
oonjal17 (6)
oonjal17 (7)
oonjal17 (8)
oonjal17 (9)


Unjal Urchavam Photos (12/09/2015):

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் – மேல்மலைனூர்,விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் திருத்த​லம். இது, சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய திருத்த​லமாகும். ( பிரம்ம ஹத்தி தோஷம் என்னவெனில் பிரம்மனால் படைக்கப்பட்ட உயிரினத்தை கொல்லும் போது நம்மை ஆட்கொள்ளும் பாவமே பிரம்மஹத்தி தோஷம். பிரம்ம ஹத்தி தோஷத்தால் பாதிக்கப்ட்டவர்கள் பித்துப் பிடித்தது போல் பல பெரும் துயரங்களை அனுபவிப்பார்கள் ). இத்திருக்கோயிலில் மாதம்தோறும் அமாவாசை நாளன்று அருள்மிகு அங்காளம்ம​னுக்கு​ ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்கிறார்கள். கடந்த 12.09.2015 அமாவாசை நாளன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகளும் நடைபெற்றன. அன்று நள்ளிரவு, அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தலாட்டு பாடல்களோடு போற்றிப் பாடல்களும் பாரம்பரியமான பம்பை, உடுக்கை வாத்தியங்களோடு பாடப்பட்டன. .ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற தலபுராண அடிப்படையில், தொடர்ந்து மூன்று அமாவசை தின ஊஞ்சல் உற்சவங்களில் கலந்துகொண்டு அம்மனை வணங்கும் போது அவர்களின் பிரம்ம ஹத்தி தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் விலகி, ஏவல் பில்லி சூனியம் ஆகியவை தீர்ந்து பகைவரின் சூழ்ச்சிகள் அனைத்தும் அகன்று அவர்கள் அம்மனின் அருட்பார்வைக்கு ஆளாவர் என்பது பகதர்களின் நூற்றாண்டு நம்பிக்கை. . நள்ளிரவு, அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து பம்பை, உடுக்கை வாத்தியங்களோடு இசைக்கும் போது, பலநூறு பக்தர்கள் - குறிப்பாக பக்தைகள் - அருளிறங்கி ஆடி, ஆன்மசுத்தி பெறுகின்ற அற்புதக் காட்சி, கலியுகத்தின் அதிசயம் ஆகும். பக்தர் அனைவரும் தத்தம் வேண்டுதலாக தாங்கள் அர்ச்சனை செய்த அரைமூடித் தேங்காயைத் தலைக்குமேல் நெய்விளக்கோடு உயர்த்தி ஏந்துகின்ற சில கணங்கள், இத்தலத்திற்கு வெகு அருகே உள்ள அக்கினித்தலமாம் அண்ணாமலையார் கோயிலின் மகாதீபத்தைக் கண்டதைப்போன்ற பரவசத்தை பலமடங்கு நல்குமென்பது நேரில் வந்து உணரவேண்டிய அற்புதமான ஒரு அதிசய ஆன்மீக அனுபவம். அமாவாசை தினத்தில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான காவலர் காவல்துறையினரால் குவிக்கப்பட்டுருந்தனர். பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. இந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் இந்து சமய ஆணையர் ,இணை ஆணையர். , உதவி ஆணையர், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்த கோடிகளும் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

maelmalayanur_veerashanmughamoni15 (1)
maelmalayanur_veerashanmughamoni15 (10)
maelmalayanur_veerashanmughamoni15 (11)
maelmalayanur_veerashanmughamoni15 (12)
maelmalayanur_veerashanmughamoni15 (13)
maelmalayanur_veerashanmughamoni15 (14)
maelmalayanur_veerashanmughamoni15 (15)
maelmalayanur_veerashanmughamoni15 (2)
maelmalayanur_veerashanmughamoni15 (3)
maelmalayanur_veerashanmughamoni15 (4)
maelmalayanur_veerashanmughamoni15 (5)
maelmalayanur_veerashanmughamoni15 (6)
maelmalayanur_veerashanmughamoni15 (7)
maelmalayanur_veerashanmughamoni15 (8)
maelmalayanur_veerashanmughamoni15 (9)
maelmalayanur_veerashanmughamoni15
Unjal Urchavam Photos :

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருத்தளமாகும். இங்கு சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதால் . அமாவசை தினத்தன்று நல்லிரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தை தரிசனம் செய்தால் பக்தர்கள், தாங்கள் செய்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவார்கள். பிரம்மஹத்தி என்றால் பிரம்மனால் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரினத்தையும் கொள்ளும் போது பிடிக்கும் தோஷமே பிரம்மஹத்தி தோஷமாகும். அப்படி பக்தர்களை பிடித்திருக்கும் ஏவல், பில்லி, சூனியம் போன்ற அனைத்து பிணிகளிலிருந்தும் அம்மன் உங்களை காத்தருள்வாள். ஆடி அமாவசை முன்னிட்டு திருக்கோயில் கருவரையில் அமர்ந்திருக்கும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டாடை உடுத்தி தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்கலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை காண மலையனூரில் குவிந்தனர். திருக்கோயில் பணியாளர்களுடன் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

aadiamavasaiunjal15_001
aadiamavasaiunjal15_002
aadiamavasaiunjal15_003
aadiamavasaiunjal15_004
aadiamavasaiunjal15_005
aadiamavasaiunjal15_006
aadiamavasaiunjal15_007